யாழ்ப்பாண வைத்தியத்துறையிலே மிகப்பெரியதொரு ஆளுமைகளில் ஒருவர் ஓய்வு பெறுகின்றார்!

சத்திரசிகிச்சைகளில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை கொண்டு ,மிகப்பெரிய நிபுணராக மக்களுக்கு சிறப்பான சேவையாற்றிய வைத்திய நிபுணர் நா.சிறீஸ்கந்தராஜா அவர்கள் தனது 63 ஆவது வயதுடன் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

34 வருட சேவையில் யாழ்ப்பாணம் மக்களுடனேயே நின்று ,எமது மக்கள் முக்கியமாக போர்க்கால விழுப்புண்கள் , அதிலும் குறிப்பாக கண்ணிவெடிகளில் கால்களை வைத்து துன்பப்பட்டபோது அவர்களுக்காக இரவு பகலாக சத்திர சிகிச்சைகளை மிகப்பெரும் நிபுணர்களுக்கு வலது கையாக நின்று சத்தமில்லாமல் செய்தவர்.

தான்கொண்ட கொள்கையால் துன்பத்தில் இருக்கின்ற தனது யாழ்ப்பாண மக்களை விட்டுட்டு ஓடக்கூடாது “ என்ற உயரிய கொள்கையோடு மக்களோடு நின்று பணிபுரிந்தவர்.

1995 - 1996 களில் நீர்வேலி ,கோப்பாய் ,கோண்டாவில் மக்களில் அனேகர் கண்ணிகளில் தமது கால்களை இழந்தபோது வீட்டுக்கு கூட செல்லாமல் விழுப்புண் அடைந்த மக்களுக்கு சேவையாற்றிய நல்லுள்ளம்.

சத்திரசிகிச்சை நிபுணர்கள் இல்லாத காலத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட விடுதிகளை தாங்கி நின்று சேவையாற்றிய தற்துணிவான #தமிழன்.

இவரின் மனைவியும் ஓர் வைத்தியர்.

இரண்டு பிள்ளைகள்..

மகள் வைத்தியர்

மகன் பொறியியலாளர்.

யாழ்.மண்ணின் பெருமை,சித்தன்கேணி மண்ணின் மைந்தன் நா.சிறீஸ்கந்தராஜா அவர்களின் 63 வது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதோடு அவரது ஓய்வு காலமும் மகிழ்வாகவும் சிறப்பாகவும் அமைய இறையருள் துணையிருக்கட்டும்.

Bootstrap