'உறங்கும் பெண்மணி' தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமைந்துள்ள ‘ஸ்லீப்பிங் லேடி’ (Sleeping Lady) என அழைக்கப்படும் மலை, வான்வழியாக மேலிருந்து பார்க்கும்போது ஓய்வெடுத்து படுத்திருக்கும் பிரம்மாண்டமான பெண்ணின் உருவத்தை ஒத்திருப்பதால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலிருந்து நோக்கும்போது, இயற்கையாக உருவான மலைத்தொடரின் அமைப்பு, தலை, மார்பு, இடுப்பு மற்றும் கால்கள் உள்ளிட்ட மனித உருவத்தைப் போன்ற தோற்றத்தை மிகத் தெளிவாகப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது.

இந்த அபூர்வமான இயற்கை அமைப்பு காரணமாக, ‘ஸ்லீப்பிங் லேடி’ மலை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதுடன், புகைப்படக் கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.

இயற்கையின் வியப்பூட்டும் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மலை, அலாஸ்காவின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.

Bootstrap