தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியான நொந்தபுரி மாகாணத்தில் உள்ள பிரபல அரசுப் பாடசாலையொன்றில் இன்று (07) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
டெப்சிரின் நொந்தபுரி பாடசாலையில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர் குறித்த மாணவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்புத் தேடி வகுப்பறைகளிலிருந்து வெளியேறியதுடன், அவசர மீட்புக் குழுவினர் மற்றும் அம்பூலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாய்லாந்து பொலிஸார் மேந்கொண்டு வருகின்றனர்.