அமெரிக்காவில் தற்போது பணியில் உள்ள இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்றக் கொள்கையின்ஒரு பகுதியாக, அந்நாட்டில் பல்லாண்டுகளாக இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றப் பாதுகாப்புகளை இரத்து செய்து, இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ட்ரம்ப் 2ஆவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு கைதுசெய்யப்பட்டவர்களில் குறைந்தது 6 பேர் ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் 8 பேர் தற்போது மத்திய குடியேற்றக் பொலிஸாரின் காவலிலுள்ளனர்.
ஈரானுடன் போர் பதற்றம் நிலவும் தற்போதைய சூழலில், குடும்பத்தினரின் கைது நடவடிக்கை இராணுவ வீரர்களின் மனவுறுதியையும் பணித் திறனையும் கடுமையாகப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இராணுவத்தில் சேருவதற்கான விளம்பரங்களில் வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியேற்றச் சலுகைகள் தொடா்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.