கனடாவின் பி.சி. பகுதியில் 72 வயது மூதாட்டியை தாக்கிய கிரிஸ்லி கரடி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்திலுள்ள ‘ஸ்குவாமிஷ்-லில்லூயெட்’ (Squamish-Lillooet) மண்டலத்திற்குட்பட்ட கோல்ட் பிரிட்ஜ் (Gold Bridge) என்ற தொலைதூரப் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது.

 72 வயதான மூதாட்டி ஒருவர் கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் ஹெலிகாப்டர் (Airlift) மூலம் வான்கூவர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் முதற்கட்ட ஆய்வில், தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காகத் தாய்க்கரடி நடத்திய தற்காப்புத் தாக்குதல் (defensive attack) இதுவெனத் தெரியவந்துள்ளது.

தற்காப்பிற்காகவே கரடி தாக்கியதால், அதை வேட்டையாடவோ அல்லது பிடிக்கவோ மாட்டோம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Bootstrap