குஜராத்தில் அசையும் கிணறு

இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வீரபத்ரா கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தன் நிலத்தில் பிரம்மாண்ட கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார் ப்ரன் ஜீவன் சதாரியா என்னும் விவசாயி.

இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, கிணற்றுக்குச் சென்ற சதாரியா, வித்தியாசமான காட்சி ஒன்றைக் கண்டுள்ளார்.

வாளியை அசைக்கும்போது அதிலுள்ள தண்ணீர் அசைவதைப் போல, அந்தக் கிணற்றிலுள்ள நீர் பயங்கரமாக அசைந்துகொண்டே இருந்திருக்கிறது, சில நேரங்களில் கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேயும் சிந்தியுள்ளது.

எதனால் இந்த கிணற்றிலுள்ள நீர் அசைந்துகொண்டே இருக்கிறது என்பது யாருக்கும் புரியாத நிலையில், இது நிலநடுக்கம் தொடர்பானது அல்ல என்று மட்டும் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில், நில இயல் நிபுணரான J.S. Vadher என்பவர், சமீபத்தில் பெய்த மழை, நிலத்தடி நீரில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் இந்த விடயம் நடக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

அதாவது, நிலத்தடி நீர் வேகமாக பூமிக்கடியில் செல்லும்போது, பாறைகளுக்கிடையில் சிக்கியுள்ள காற்று வெளியேறுவதால் அந்தக் கிணற்றிலுள்ள தண்ணீர் அசையக்கூடும் என்கிறார் அவர்.

என்றாலும், நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவர்களுடைய ஆய்வு முடிவுகள் இந்த விடயத்துக்கு விளக்கமளிக்கக்கூடும். அதுவரை, இந்த அசையும் கிணறு ஒரு மர்மமாகவே நீடிக்கப்போகிறது.

இந்நிலையில், இந்த அரிய காட்சியைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு கூடிவருகிறார்கள்.

Bootstrap