Abacus Data வெளியிட்ட புதிய கருத்துக் கணிப்பு தகவல்களின்படி, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ, மேனிடோபா மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களைச் சேர்ந்த 69% கனடியர்கள் அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை மாகாண அரசுகள் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். 19% பேர் மட்டுமே தடையை நீக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கனடா மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களை புறக்கணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஆகஸ்ட் 19 முதல் கனடியப் பொருட்கள் மீது 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மாகாணங்கள் வாரியாக ஆதரவு:
பிரிட்டிஷ் கொலம்பியா: 72%
ஒன்டாரியோ மற்றும் அட்லாண்டிக் கனடா: 69%
மேனிடோபா: 63%
60 வயதிற்கு மேற்பட்டோரில் 78% பேர் இந்தத் தடைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் (30-44 வயதுக்குட்பட்டோரில் இது 60%).
லிபரல் (83%) மற்றும் என்.டி.பி (84%) வாக்காளர்கள் பெருமளவில் இந்தத் தடையை ஆதரிக்கின்றனர்; கன்சர்வேடிவ் வாக்காளர்களில் 53% பேர் மட்டுமே ஆதரிக்கின்றனர்.
பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு கனடா உடனடியாகப் பணிந்துவிடக் கூடாது என்பதில் பெரும்பாலான கனடியர்கள் உறுதியாக உள்ளனர். மேலும், Ipsos நடத்திய மற்றொரு கணிப்பில், 60% கனடியர்கள் இனி அமெரிக்கர்களை முந்தையது போல் நம்ப முடியாது எனக் கூறியுள்ளனர்.