மொன்ட்ரியலைச் சேர்ந்த 46 வயதான லூசியானோ பிராட்டோலின் (Luciano Frattolin) என்பவர், கடந்த 2025 கோடையில் நியூயார்க்கிற்குச் சென்றபோது, தனது 9 வயது மகள் மெலினாவைக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் எலிசபெத்தவுனில் (Elizabethtown, N.Y.) நடைபெறும் இந்த விசாரணையில், அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) மற்றும் உடலை மறைத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து 'குற்றவாளி இல்லை' (Not guilty) எனத் தெரிவித்துள்ளார்.
சிறுமி காணாமல் போவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன், ஜூலை 19, 2025 அன்று மதியம் தனது தாய்க்கு அனுப்பிய வீடியோ காட்சி ஜூரி உறுப்பினர்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
அந்த வீடியோ அனுப்பப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிறுமியின் தொலைபேசி கடைசியாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாள் நியூயார்க்கின் கிராமப்புறப் பகுதியிலுள்ள சதுப்பு நிலத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வழக்குத் தொடுப்பாளர்கள் (Prosecutors) தங்களது தரப்பு விசாரணையை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.