அமைப்பின் "சிறந்த நலன்களுக்கு" (Best Interests) உகந்தது எனில் மட்டுமே பாடி கேமரா வீடியோக்களை வெளியிடும்: ICE கொள்கை விளக்கம்.

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்கச் அமலாக்கப் பிரிவு (ICE) தனது கள அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (செப்டம்பர் இறுதிக்குள்) பாடி கேமராக்களை (Body cameras) வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கேமரா காட்சிகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் அமைப்பின் இயக்குநருக்கே வழங்கப்பட்டுள்ளது. "அமைப்பின் சிறந்த நலன்களுக்கு" உகந்தது என்று கருதினால் மட்டுமே துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிர சம்பவங்களின் வீடியோக்கள் வெளியிடப்படும்.

 இந்த விதியைப் பயன்படுத்தி, அமைப்புக்கு நற்பெயர் தரும் வீடியோக்களை மட்டும் வெளியிட்டுவிட்டு, சர்ச்சைக்குரிய அல்லது தவறுகளைக் காட்டும் வீடியோக்களை மூடி மறைக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

2025-இல் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, கூட்டாட்சி முகமைகள் கட்டாயம் பாடி கேமரா அணிய வேண்டும் என்ற முந்தைய பைடனின் உத்தரவை ரத்து செய்தார். இருப்பினும், அண்மையில் ஹூஸ்டன் மற்றும் மேன் (Maine) பகுதிகளில் ICE அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தத்தால், தற்போது கேமராக்களை வாங்க $30.9 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக, எந்தவொரு வீடியோ வெளியிடப்பட்டாலும் அதிகாரிகளின் முகங்கள், பெயர்கள் மற்றும் பேட்ஜ் எண்கள் (Badge numbers) மறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap