ஆகஸ்ட் 12 அமாவாசை நாள் என்பதால், நிலவின் வெளிச்சம் இருக்காது. இதனால் வானம் இருளாக இருந்து, இரவில் விண்கல் மழையைத் தெளிவாகப் பார்க்கச் சிறந்த சூழலை உருவாக்கும்.
வானியல் ஆர்வலர்களுக்கு ஆகஸ்ட் 12 அன்று ஒரு அபூர்வ இரட்டை விருந்து காத்திருக்கிறது. ஒரே நாளில் பகலில் முழு சூரிய கிரகணமும், இரவில் 'பெர்சீட்ஸ்' (Perseids) விண்கல் மழையின் உச்சக் கட்டமும் நிகழவுள்ளன.
பகலில் தோன்றும் முழு சூரிய கிரகணம்
ஆகஸ்ட் 12 அன்று, நிலவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சரியாகக் கடந்து சென்று, சூரியனின் ஒளியை முழுமையாக மறைக்கும்.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் வட ரஷ்யாவின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணத்தைக் காணலாம்.
இந்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது.
முழு கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கொரோனா' (Corona) தெளிவாகப் புலப்படும்.
சூரியன் மறைந்த பிறகு, இரவில் மற்றொரு விண்வெளி அதிசயம் நிகழும்.
109P/ஸ்விஃப்ட்-டஃபிள் என்ற வால்நட்சத்திரத்தின் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் அதிவேகமாக உராய்ந்து நுழையும் போது எரியும் வெளிச்சமே இந்த 'எரிகல் மழை' ஆகும்.
ஆகஸ்ட் 12-13 இரவில் இந்த விண்கல் மழை அதன் உச்ச நிலையை அடையும்.
ஆகஸ்ட் 12 அமாவாசை நாள் என்பதால், நிலவின் வெளிச்சம் இருக்காது. இதனால் வானம் இருளாக இருந்து, இரவில் விண்கல் மழையைத் தெளிவாகப் பார்க்கச் சிறந்த சூழலை உருவாக்கும்.
பாதுகாப்பு எச்சரிக்கை:
சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பற்ற வெறும் கண்களாலோ அல்லது சாதாரண கூலிங் கிளாஸ் மூலமாகவோ நேரடியாகப் பார்க்கக் கூடாது; சான்றளிக்கப்பட்ட சூரிய கிரகணக் கண்ணாடிகளைப் (Solar Filters) பயன்படுத்த வேண்டும்.