தென் ஒன்டாரியோவின் கோல்டன் ஹார்ஸ்சூ (Golden Horseshoe) பகுதியில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கனடிய அரச காவல்துறை (RCMP) $4.5 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளது. ஜூலை 8 அன்று டொராண்டோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் (Condominium) காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து கொக்கைன் சேமிக்கப்பட்டு விநியோகத்திற்குத் தயார் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அருகில் மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
ஹேமில்டனில் உள்ள பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் $1,65,000 ரொக்கப் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்:
ஹேமில்டனைச் சேர்ந்த 39 மற்றும் 38 வயதுடைய இருவர்.
பிராண்ட்போர்டைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர்.
இவர்கள் மூவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.