ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் (East St. Louis, Ill.) பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த 78 வயதான ஜான் டபிள்யூ. ஆலன் (John W. Allen) என்பவரைக் கோமாளி (Clown) உடை அணிந்த 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொன்றுள்ளான்.
ஆகஸ்ட் 3, 2026 அன்று இரவு 10 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு, சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்து, ஆகஸ்ட் 6 அன்று அவன் மீது முதல் நிலை கொலைக் குற்றம் (First-degree murder) சுமத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு முன், கோமாளி உடையில் இருந்த அந்தச் சிறுவன் வீடொன்றின் வாசலில் வந்து "நான் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று அச்சுறுத்தும் வகையில் பேசுவது அங்குள்ள ரிங் கேமராவில் பதிவாகியுள்ளது.
இது எவ்வித தனிப்பட்ட பகையுமின்றி எதேச்சையாக நடத்தப்பட்டத் தாக்குதல் (Random attack) எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில் முதியவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.