கயாஷ்கே ஜாகாங் அனிஷினாபெக் (Gull Bay First Nation) ஒன்டாரியோ அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

ஒன்டாரியோ அரசு காட்டுத்தீ கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளைத் திரும்பப் பெற்றதற்கு, கயாஷ்கே ஜாகாங் அனிஷினாபெக் தலைவர்கள் தங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

சமூகத்திற்கு அருகில் உள்ள Thunder Bay 36 காட்டுத்தீ (3,01,000 ஹெக்டேருக்கு மேல் பரவியுள்ளது) இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இது நிலவழி வெளியேற்றத்திற்கான ஒரே பாதையான நெடுஞ்சாலை 527-க்கு நேரடியாக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 இயற்கை வளங்கள் அமைச்சகம் (MNR) வழங்கும் தீ பற்றிய தகவல்களும் செயற்கைக்கோள் வரைபடங்களும் 24 முதல் 48 மணிநேரம் தாமதமாகவே வருகின்றன. இதனால் ஆபத்து காலத்தில் அவற்றின் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்று தலைமை அதிகாரி வில்பிரெட் கிங் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீண்டும் திரும்புவதற்கு முன், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பரிசோதித்தல் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள கழிவுநீர் திட்டப் பணிகளைச் சரிசெய்தல் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 கனடாவின் பூர்வகுடி சேவைகள் அமைப்பின் (ISC) ஆதரவோடு, உள்ளூர் அளவில் இந்த வெளியேற்ற உத்தரவு தொடரும் என்றும், மீறி திரும்புபவர்கள் சொந்தப் பொறுப்பிலேயே திரும்ப வேண்டும் என்றும் சமூகத் தலைமை எச்சரித்துள்ளது.

Bootstrap