ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் 400 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணித்து வரும்; பிரம்மாண்ட விருந்து மண்டபக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ட்ரம்பின் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு, ட்ரம்பின் அதிபர் அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட புதிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்;.
இதுபோன்ற பெரிய மண்டபத்தைக் கட்ட வேண்டுமா இல்லையா என்பதை அமெரிக்க நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். இது நிர்வாகத் துறை தன்னிச்சையாக முடிவு செய்ய வேண்டிய விடயமல்ல என்று மேன்முறையீட்டு நீதியரசர்கள்; அமர்வில் பெரும்பாலானோர் தீர்ப்பளித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்காக, கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையின் கிழக்குத் பிரிவை ட்;ரம்பின் நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியது.
இதை எதிர்த்து வரலாற்றுப் பாதுகாப்பிற்கான தேசிய அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தற்காலிகத் தடையை மேன்;முறையீட்டு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப, மக்களின் இல்லமான வெள்ளை மாளிகையை முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யவோ அல்லது மறுசீரமைக்கவோ நிர்வாகத் துறைக்கு நாடாளுமன்றம் எவ்வித கட்டுப்பாடற்ற அதிகாரத்தையும் வழங்கவில்லை" என்று நீதிமன்றம் தமது தீர்ப்;பில் குறிப்பிட்டுள்ளது.
மூன்று நீதியரசர்களைக்; கொண்ட இந்த அமர்வு வழங்கிய 2-1 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில்: "ஒவ்வொரு ஜனாதிபதியும் வெள்ளை மாளிகையிலும் அதன் உத்தியோகபூர்வ இல்லத்திலும் தற்காலிகமாகக் குடியிருக்கும் வாடகைதாரரே தவிர, அதன் உரிமையாளர் அல்லர் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றின் இந்த தீர்ப்பு, மிகவும் மோசமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது எனத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ட்ரம்ப், சாடியுள்ளார்.
புதிய விருந்து மண்டபமானது, அரச விருந்தினர்கள் மற்றும் பிரம்மாண்ட விசேஷங்களுக்கு ஆட்களை உபசரிக்க தேவைப்படுவதாகவும், "தேசியப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.