உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா தலைவரின் வாழ்க்கை என்பது உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களுடன் தொடர்புகளை வளர்ப்பதை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தற்போதைய தலைவர் இன்ஃபான்டினோவுக்கு உள்ள உறவு இதற்குச் சிறந்த சான்றாகும்.
ஆண்களுக்கான உலகக்கிண்ணத் தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்தே இன்ஃபான்டினோ வகிக்கும் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஒருவரின் அதிகாரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மொரோக்கோவின் ரபாத் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகத்திற்கு இன்ஃபான்டினோ நேற்று வருகை தந்தபோது, அவருக்கு காவல்துறை பாதுகாப்புடன் கூடிய கறுப்பு நிற மெர்சிடீஸ் சிற்றூந்துகளின் அணிவகுப்பு வழங்கப்பட்டது.
கட்டார் ஏர்வேஸ் எக்ஸிகியூட்டிவ் ஜெட் வானூர்தி மூலம் உலகமெங்கும் பயணிக்கும் அவர், 2026 உலகக்கிண்ணப் போட்டிகளின்போது ஒருநாளைக்கு மூன்று வானூரதிகளில் பயணித்து போட்டிகளைக் நேரில் கண்டு களித்தார்.
2016 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆண்டுக்கு சுமார் 1.3 மில்லியன் டொலர்களை வேதனமாகப் பெற்ற இன்ஃபான்டினோ, தற்போது அடிப்படைச் சம்பளமாக 2.2 மில்லியன் மற்றும் ஊக்கத்தொகையாக 1.8 மில்லியன் என மொத்தம் சுமார் 4 மில்லியன் டொலர்களை வருட வேதனமாக பெறுகிறார்.
இது தவிர, வாழ்க்கைச் செலவினங்களுக்காக அவருக்கு வருடம் ஒன்றுக்கு 20,500 டொலர்கள் தனியாக வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் இன்ஃபான்டினோக் கொண்டிருந்த நெருக்கம் அவரது அந்தஸ்தை உயர்த்திய போதிலும், உலகக் கால்பந்து அமைப்புகளிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.
2025 மே மாதம், ட்ரம்புடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்தமை காரணமாக பெரகுவேயில் நடைபெற்ற ஃபீஃபா மாநாட்டிற்கு இன்ஃபான்டினோ இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தடைந்தார். இதன் காரணமாக, ஐரோப்பிய கால்பந்து பிரதிநிதிகள் மாநாட்டைப் புறக்கணித்து வெளியேறினர்.
அத்துடன் அமெரிக்கா, வெனிசுலா மற்றும் ஈரான மீது தாக்குதல்களை நடத்துவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு ட்ரம்பிற்கு 'ஃபிஃபா அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது.
உலகக்கிண்ணப் போட்டி ஒன்றின்போது சிவப்பு அட்டையைப் பெற்ற அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகன் மீதான தடையை நீக்கத் தான் நேரடியாக இன்ஃபான்டினோவிடம் பேசியதாக ட்ரம்ப் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நெருக்கமான தொடர்புகளின் உச்சக்கட்டமாகவே 'குகைய குழசறயசன நுவெநசிசளைந' திட்டம் உருவானது.
இதன் தனியார் முதலீட்டாளராக ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் சகோதரருடன் தொடர்புடைய நிறுவனம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.