ஆல்பர்ட்டாவின் ப்ரொவோஸ்ட் (Provost) அருகே நெடுஞ்சாலை 13 மற்றும் 41 சந்திப்பில், எட்மண்டன் பெண்கள் சிறையிலிருந்து (Edmonton Institution for Women) கைதியைக் கொண்டு சென்ற கனடா சிறைத்துறைச் சேவை (CSC) வேனும், லாரியும் (Box Truck) மோதி விபத்துக்குள்ளானது.
சிறைத்துறை வேனில் பயணித்த அதிகாரிகள் இருவரும், கைதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை (RCMP) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கைதியை எங்கு அழைத்துச் சென்றார்கள் மற்றும் வேனுக்குள் அவர் எவ்வாறு பிணைக்கப்பட்டிருந்தார் போன்ற விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
இந்தத் சோகச் சம்பவத்திற்கு கனடா சிறைத்துறைத் தலைவர் தலால் டகல்பப் (Talal Dakalbab), பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre) உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் விவரம்:
நிகோலே செர்பன் (Nicolae Serban - 57): சிறைக் துறை அதிகாரி (ஷெர்வுட் பார்க், ஆல்பர்ட்டா).
ரமந்தீப் கவுர் மான் (Ramandeep Kaur Maan - 25): சிறைக் துறை அதிகாரி (வின்னிபெக்).
கியாரா மூஸ்வா (Kiara Mooswa - 24): கைதி (பவுண்ட்மேக்கர் க்ரீ நேஷன், சஸ்காட்செவன்).