மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதி, பாதாள உலகக் குழுவின் முக்கிய நபரான 'கொஸ் மல்லி' என்பவரின் பிரதான ஒப்பந்த துப்பாக்கிதாரி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த கைதி ஹோமாகம, ரத்தொளுகம - கட்டுவன வீதியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மான் ஷெரஃப்தீன் எனப் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு எல்லை மீறிச் சென்றதாலேயே இம்மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த சந்தேகநபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்