ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது முகவருமான ஜோர்ஜ் மெஸ்ஸி தனது 68ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஆர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.