துருக்கி மற்றும் சிரிய அகதிகளின் பணி அனுமதி கோரிக்கை: தாய் மற்றும் மகனின் கண்டன நடைபயணம்

47 வயதான ஷெபிகா ஒஸ்லெம் யாமன் ஷாஹின் (Şefika Özlem Yaman Şahin) மற்றும் அவரது 12 வயது மகன், டொராண்டோவில் இருந்து ஒட்டாவா வரை சுமார் 500 கிலோமீட்டர் தூர நடைபயணத்தைத் தொடங்கியுள்ளனர். ஜூலை 19 அன்று தொடங்கிய இந்த பயணம், வரும் வார இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா அரசு தற்காலிக பணி அனுமதி வழங்கியது. ஆனால், இன்னும் சில மாதங்களில் இந்த அனுமதி முடிவடைய உள்ளதால், பலர் நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் தொழில்களை இழந்த மக்கள் கனடாவுக்கு வந்து, கடினமாக உழைத்து, வரிகளைச் செலுத்தி தங்கள் வாழ்க்கையை மீண்டும் அமைத்துள்ளனர். இப்போது அவர்களை வெளியேற்றினால் அது அவர்களை மீண்டும் மனரீதியாகப் பாதிக்கும்" என்று யாமன் ஷாஹின் கவலை தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக வழங்கப்பட்ட பணி அனுமதியை நீட்டிக்க வேண்டும் என்றும், சட்டப்பூர்வமாக கனடாவில் தங்குவதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி இவர்கள் இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Bootstrap