மழையை பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மத்திய மலைநாட்டில் மோசமான காலநிலை நிலவி வருகின்ற போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதை அவதானிக்க முடிந்தது.

தமது பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அவர்களுக்கு உற்சாகமளித்து பரீட்சைக்கு அனுப்பி வைத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Bootstrap