டால்பின்' (Typhoon Dolphin) சூறாவளி ஜப்பானின் ஒகினாவா (Okinawa) தீவுப் பகுதியை சக்திவாய்ந்த காற்று மற்றும் கனமழையுடன் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த சூறாவளி சீனா நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அங்குள்ள முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒகினாவாவில் மணிக்கு 150 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் வீசிய புயல் காற்றால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் படகுப் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
'டால்பின்' சூறாவளி விரைவில் சீனக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீன்பிடி படகுகள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.