சூடானின் உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தெற்கு அபிஎய் (Abyei) என்ற ஆபத்தான பிராந்தியத்திற்குச் சென்று, அமெரிக்க மருத்துவக் குழு ஒன்று 10 நாட்களில் சுமார் 1,000 கண் புரை (Cataracts) அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.
நீடித்து வரும் போரின் காரணமாக அப்பகுதியில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலும் அழிந்துவிட்டதால், தொலைதூரக் கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூடக் கிடைக்காத நிலை நிலவுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் தலைமையிலான குழு, வன்முறைகள் நிறைந்து காணப்படும் உலகின் மிகவும் அபாயகரமான இந்த எல்லைப் பகுதிக்கு நேரில் சென்று சிகிச்சையளித்துள்ளது.
கண் புரை நோயால் பார்வையை இழந்து தவித்த 1,000-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்குத் குறுகிய காலத்தில் அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பார்வை பெற உதவியுள்ளனர்.