ஒட்டாவாவில் மூளை முடக்குவாதத்தால் (Cerebral palsy) பாதிக்கப்பட்ட நபரின் பிரத்யேக சைக்கிள் திருட்டு

கனடாவின் ஒட்டாவா, அல்டா விஸ்டா (Alta Vista) பகுதியைச் சேர்ந்த கேவின் ஷா (Kevin Shaw - 54) என்ற மாற்றுத்திறனாளி நபரின் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஜூலை பாதியில், கேவின் ஷாவின் வீட்டிற்கு வெளியே நீல நிற தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்த அவரது சிறப்பு சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கேவின் ஷா உடற்பயிற்சி செய்யவும், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கவும் இந்த சைக்கிள் அவரது பாதங்களுக்கு ஏற்ப பிரத்யேகமாக molded செய்யப்பட்டு 23 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.

புதிய சைக்கிளை உருவாக்குவதற்கு $6,000 டாலருக்கும் மேல் செலவாகும் என்பதால், காப்பீடு தொகையைத் தாண்டி தனது சொந்த பணத்திலிருந்து $1,000 டாலர் வரை அவர் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 கண்காணிப்பு கேமராவில் பதிவான சுருட்டை முடி, சிவப்பு நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பை அணிந்த சந்தேக நபரைக் கண்டுபிடிக்க ஒட்டாவா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Bootstrap