உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

போர்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.

கோதுமை, சமையல் எண்ணெய், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் சர்வதேச உணவு விலைக் குறியீடு (Food Price Index) 131.1 புள்ளிகளாக உயர்ந்துள்ளதாக FAO தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் நிலவும் போர் சூழல், மோசமான வானிலை மற்றும் உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap