ராஜஸ்தான் மாநிலத்தில், திருட்டுக்கு பயந்து நிலத்தில் புதைத்து வைத்திருந்த இந்திய மதிப்பில் ரூ.5 இலட்சம் பணத்தை கறையான்கள் அரித்துச் சேதப்படுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட விவசாயி, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.5 இலட்சம் பணத்தை, திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பொலித்தீன் பையில் வைத்து நிலத்தில் புதைத்துள்ளார்.
எனினும், காலப்போக்கில் பணத்தைப் புதைத்து வைத்திருந்த சரியான இடத்தை அவர் மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் அந்த நிலத்தை உழுதபோது, புதைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தாள்கள் கறையான்களால் அரிக்கப்பட்டு பெருமளவில் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
தான் உழைத்துச் சேர்த்த பணம் இவ்வாறு நாசமானதைக் கண்டு அந்த விவசாயி கடும் வேதனை அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.