மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!

கொழும்பு, மாளிகாவத்தை - சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் கட்டுமானப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் எனவும், திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானின் உறவினர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

-----------------

கொழும்பு, மாளிகாவத்தை - சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியொன்றில் பிரவேசித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Bootstrap