சூறாவளி 'டால்பின்' சீனாவைத் தாக்கியது

சூறாவளி 'டால்பின்' (Typhoon Dolphin) சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூறாவளி 'டால்பின்' சீனாவின் கிழக்குக் கரையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஷாங்காயின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் (Hongqiao, Pudong) 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன (சுமார் 60% சேவைகள் ரத்து).

மணிநேரத்திற்கு 151 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன், இந்தச் சூறாவளி ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தின் தைஜோ (Taizhou) நகரத்தின் அருகே கரையைத் கடந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைஜோ பகுதியில் இருந்து 3,90,000-க்கும் அதிகமான மக்களும், ஷாங்காயில் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

 இந்தச் சூறாவளி காரணமாக உருவான பலத்த பருவமழை பிலிப்பைன்ஸிலும் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. அங்கு 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சீன வானிலை மையம் 200 முதல் 400 மி.மீ வரை மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால், தொடர்ந்து நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் நிலவுகிறது.

Bootstrap