50 ஆண்டுகளுக்குப் பின் 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு' மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அடுத்த மாநாடு வருகின்ற ஆண்டு இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் ( ஐக்கிய அமெரிக்கா ) இந்த அறிவிப்பை விடுத்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும்,யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடாத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கத்தில் கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் விடுத்தார்.

முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு கோலாலம்பூர், மலேசியாவில் நடைபெற்றது.

தொடர்ந்து நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவனரான தனிநாயகம் அடிகளார் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பங்குபற்றிய இறுதி மாநாடாகவும் இதுவே அமைந்தது.

யாழ்.குடாநாடே விழாக்கோலம் பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Bootstrap