ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சதுரங்கம் விளையாடுவதை போன்றதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆக்சியோஸ் (Axios) உடனான ஒரு நேர்காணலில், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதே தமது நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய துறைமுகங்களைத் தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை நடவடிக்கையால் ஈரானில் நிலைமை மோசமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஈரானிய ரியால் நாணய அலகின் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ட்ரம்ப் வௌியிட்டுள்ள ட்ரூத் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.