கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette), அமெரிக்க ஒயின்களை மாகாண மதுபானக் கடைகளின் அலமாரிகளுக்கு மீண்டும் கொண்டு வரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அது "எந்த விலையிலும் சாத்தியமில்லை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்க ஒயின்கள் மீதான தடையை நீக்க வேண்டுமானால், வர்த்தக ரீதியில் கியூபெக் பல நன்மைகளைப் பெற வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வனத்துறை (forestry), அலுமினியம் (aluminum) மற்றும் உற்பத்தித் துறைகள் (manufacturing) மீதான அமெரிக்க வரிக் தடைகளை குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய அமெரிக்க நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகளுக்குப் பதிலடியாக, கியூபெக் அரசு தனது அரசு மதுபானக் வாரியத்திற்கு (SAQ) அமெரிக்கப் பொருட்களை விற்க வேண்டாம் என உத்தரவிட்டிருந்தது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது, கியூபெக்கின் விநியோக மேலாண்மை அமைப்பு (supply management system) அல்லது மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்த விஷயங்களில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது என்று பிரெஷெட் தெளிவுபடுத்தியுள்ளார்.