கல்கரியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து,ஆல்பெர்ட்டா (Alberta) மாகாண அரசு தனது அவசரக்கால எச்சரிக்கை அமைப்பை மறுபரிசீலனை செய்ய முடிவு

ஆட்டிசம் குறைபாடுடைய பார்கர் என்ற 11 வயது சிறுவன், கடந்த ஜூலை 16 அன்று தான் தங்கியிருந்த பராமரிப்பு மையத்திலிருந்து காணாமல் போனான். சுமார் இரண்டு வாரங்களாக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் தேடிய நிலையில், சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்படக்கூடிய நபர்கள் (Vulnerable Persons) காணாமல் போகும்போது அவர்களுக்குப் பயன்படுத்தப்படும் அவசர எச்சரிக்கை நெறிமுறைகள் மற்றும் ஆம்பர் அலர்ட் (Amber Alert) அமைப்பை வலுப்படுத்துவது குறித்து காவல்துறை, ஊனமுற்றோர் உரிமை அமைப்புகள் மற்றும் சமூகப் பங்காளிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது.

சிறுவன் தங்கியிருந்த பராமரிப்பு மையத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்தும், கல்கரி காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் தனியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆம்பர் அலர்ட் முறையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், அதிக அளவிலான எச்சரிக்கைகள் பொதுமக்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடும் (desensitize) என்பதால், அமைப்பைச் சரியாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Bootstrap