ஒட்டாவாவில் தொடரும் பலத்த இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை

திங்கள்கிழமை மாலை ஒட்டாவா (Ottawa) நகருக்கு கனடா சுற்றுச்சூழல் துறையால் (Environment Canada) விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை (Tornado Warning), சில நிமிடங்களிலேயே தீவிர இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையாக (Severe Thunderstorm Warning) குறைக்கப்பட்டது

 திங்கள்கிழமை மாலை 5:30 மணிக்கு ஒட்டாவாவுக்குச் சிவப்பு நிறச் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மாலை 5:38 மணிக்கே அது மஞ்சள் நிறத் தீவிர இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையாகத் தணிக்கப்பட்டது.

 கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும், சூறாவளி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புயல் பெம்பிரோக் (Pembroke) மற்றும் ரென்ஃப்ரூகளைக் (Renfrew) கடந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது.

இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழல் என்பதால், பொதுமக்கள் உடனடியாகப் அடித்தளங்கள் (Basement) அல்லது பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். தகுந்த இருப்பிடம் இல்லாதவர்கள் தாழ்வான இடங்களில் தங்கி பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Bootstrap