காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்:

துபாயில் வாழும் பெண்ணொருவர், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் துபாய் மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

மிருதுளா சிவகுமார் துபாயில் வாழ்ந்துவரும் இந்திய இளம்பெண். சமீபத்தில் தன் காலில் அடிபட்டதால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அவர்.

அங்கு தான் சந்தித்த அனுபவம், முன்னொருமுறை பிரித்தானியாவில் சந்தித்த ஒரு அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவந்ததாக தெரிவிக்கிறார் மிருதுளா.

காலில் அடிபட்டதால் துபாயிலுள்ள மருத்துவமனைக்குச் சென்ற மிருதுளா, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது, காலில் கட்டுப்போடுவது, மருந்துகள் வாங்குவது வரை, அனைத்துமே ஒரே மணி நேரத்தில் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில் தான் ஒரு அவசர வேலையாக பிரித்தானியா சென்றிருந்த நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவில், மருத்துவரை சந்திக்கவே ஆறு மணி நேரம் காத்திருந்ததாகத் தெரிவிக்கிறார் மிருதுளா.

இந்த தகவலை மிருதுளா சமூக ஊடகம் ஒன்றில் பகிர, அதைப் படித்த பலரும் தாங்களும் பிரித்தானியாவிலும் அமீரகத்திலும் உள்ள மருத்துவமனைகளில் தாங்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்கள்.

பிரித்தானியாவிலுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் அவசர தேவைகருதி மருத்துவமனைகளுக்கு சென்றால் தாங்கள் இறந்நுதான் வெளியே வரவேண்டிய தேவை ஏற்படுமென்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் அந்தளவு காத்திருப்பு நேரங்கள் அதிகம் என்று கூறுகின்றனர். சிலர் தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை அயல் நாடுகளுக்கு சென்று எடுப்பதாகவும் கூறுகின்றனர்.

Bootstrap