டாபியின் நினைவிடம் அருகே மின்சார கேபிள் பாதை மாற்றம்

பிரிட்டன் மற்றும் அயர்லாந்தை இணைக்கும் £430 மில்லியன் (சுமார் $CAD 809 மில்லியன்) மதிப்பிலான 'கிரீன்லிங்க்' (Greenlink) நிலத்தடி மின்சார கேபிள் திட்டத்தின் பாதை, 'ஹாரி பாட்டர்' ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து மாற்றப்பட்டுள்ளது.

 இந்த மின்சார கேபிள், ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் திரைப்படம் படமாக்கப்பட்ட வேல்ஸில் உள்ள ப்ரெஷ்வாட்டர் வெஸ்ட் (Freshwater West) கடற்கரையில் அமைந்துள்ள 'டாபி' (Dobby) என்ற கற்பனை கதாபாத்திரத்தின் நினைவிடத்தின் வழியே செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

 2019-இல் இத்திட்டம் குறித்து பிபிசி (BBC) வாயிலாக அறிவிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு டாபியின் நினைவிடத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தீவிர எதிர்ப்பு தெரிவித்தனர்.

 ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கடற்கரையோ, மணல் மேடுகளோ அல்லது டாபியின் நினைவிடமோ எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் கேபிளின் பாதை மாற்றப்பட்டு வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அருகில் உள்ள வெண்கலக் கால (Bronze Age) தொல்பொருள் எச்சங்கள் இருக்கும் பகுதி வழியே இந்த கேபிள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Bootstrap