“ரத்மலான சைமா” 48 மணிநேரம் தடுப்புக் காவலில் விசாரணை

கஞ்சிப்பான இம்ரானின் நண்பரும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கண்டி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேகநபர்களும் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களில் ஒருவரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Bootstrap