கொங்கோவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை 4,381 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 704 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா, கொங்கோவில் தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்துவதில் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.