கனடா விமானப்படை அதிகாரிக்கு வழங்கிய விருதினால் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

கனடாவின் அரச விமானப் படையைச் (Royal Canadian Air Force) சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க ராணுவ விருது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் கனடாவின் பங்களிப்பு குறித்துக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

 முன்னாள் CF-18 போர் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த கர்னல் டேவிட் கே. டூரேன் (Col. David K. Turenne) என்பவருக்குக் கனடா அரசாங்கத்தின் உயரிய 'மெரிட்டோரியஸ் சர்வீஸ் க்ராஸ்' (Meritorious Service Cross) விருது வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு செய்தி வெளியாகியுள்ளது.

ஜூன் 2025-இல் நடைபெற்ற இஸ்ரேல்-ஈரான் மோதலின் போது, 'கூட்டு வான் செயல்பாட்டு மையத்தின்' (Combined Air Operations Center) இயக்குநராகச் செயல்பட்டு பன்னாட்டு வான்வழி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தமைக்காகவும், கட்டாரின் தோஹாவில் உள்ள அல் உதீத் (Al Udeid) விமானப் படைத் தளத்திலிருந்து 10,000 ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2025-இல் நடைபெற்ற மோதலில் ஒரு கனடா அதிகாரி நேரடியாகப் பங்காற்றியது பகிரங்கமாகத் தெரியவந்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதனால், அமெரிக்க தலைமையிலான போரில் கனடா ராணுவத்தின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

 ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் கனடா ராணுவம் பங்கேற்கவில்லை எனப் பிரதமர் மார்க் காரி (Mark Carney) ஏற்கனவே தெரிவித்திருந்தார். அமெரிக்கப் படைகளுடன் பரிமாற்ற அடிப்படையில் பணியாற்றும் கனடா வீரர்கள் அப் பகுதியில் நிலைகொண்டிருந்த போதிலும், அவர்கள் நேரடியாக ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்று கனடா பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Bootstrap