Travel + Leisure இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 'உலகின் சிறந்த விருதுகள்' (World's Best Awards) வாக்கெடுப்பில், கனடாவின் தலைநகரான ஒட்டாவா மற்றும் முக்கிய நகரமான வான்கூவரைப் பின்னுக்குத் தள்ளி, செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள கெபெக் நகரம் (Quebec City) கனடாவின் சிறந்த நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2,07,000-க்கும் மேற்பட்ட வாசகர்கள் அளித்த 6,61,000 வாக்குகள் அடிப்படையில், கெபெக் நகரம் 86.99 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பிய பாணி பழமை மாறாத கட்டடங்கள், புகழ்பெற்ற பழைய நகரம் (Old Town), வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோட்டல்கள் மற்றும் நதிக்கரையின் அழகிய சூழல் ஆகியவை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
1608-இல் பிரெஞ்சு வர்த்தக மையமாக நிறுவப்பட்ட இந்த நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பகுதி, 1985-ஆம் ஆண்டில் 'யுனெஸ்கோ' (UNESCO) உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
1893-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பிரெஞ்சு கோட்டை பாணியிலான 'ஃபேர்மாண்ட் லீ சாட்டோ ஃப்ரான்டெனாக்' (Fairmont Le Château Frontenac) ஹோட்டல் இந்நகரத்தின் பிரதான அடையாளமாகத் திகழ்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, பிலாடெல்பியா போன்ற முக்கிய நகரங்களில் இருந்து கெபெக் சர்வதேச விமான நிலையத்திற்கு (YQB) நேரடி விமானச் சேவைகள் உள்ளன.