ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வடகொரிய ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் மீது நடத்தப்பட்ட இரவு நேரத் தாக்குதல்களில் ரஷ்யா வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் (Ballistic Missiles) பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சாடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

உக்ரைனின் ஜபோரிஜியா (Zaporizhzhia) நகரின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் வழிகாட்டப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். இதில் வடகொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 வரலாற்றிலேயே "முதல்முறையாக" வடகொரியாவின் ராணுவ உதவி இல்லாமல் ரஷ்யாவால் போரைத் தொடர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாக ஜெலென்ஸ்கி கூறினார். வடகொரிய ஏவுகணைகள் மற்றும் வீரர்கள் இங்குப் பயன்படுத்தப்படுவது உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

உக்ரைனின் எல்லையிலிருந்து 1,100 கி.மீ தொலைவில் உள்ள ரஷ்யாவின் தாதர்ஸ்தான் (Tatarstan) குடியரசு பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் வோரோனேஜ் (Voronezh) பகுதியில் அமைந்துள்ள 'வைல்ட்பெர்ரிஸ்' (Wildberries - ரஷ்யாவின் அமேசான் என அழைக்கப்படும்) நிறுவனத்தின் கிடங்குகள் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேற்கு சைபீரியாவில் உள்ள ரஷ்யாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீதும் உக்ரைன் வெற்றிகரமாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் கிவ் (Kyiv), கெர்சன் (Kherson) மற்றும் கார்கிவ் (Kharkiv) ஆகிய பகுதிகளில் உள்ள மின் துணை நிலையங்கள் பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளது.

Bootstrap