பள்ளியின் முதல் நாளில் அம்மாவுக்குப் படம் எடுக்க மறுத்த 5 ஆம் வகுப்பு மாணவர் விளையாட்டாக 'கைது': கொலராடோவில் சுவாரசிய சம்பவம்

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள கீன்ஸ்பர்க் (Keenesburg) பகுதியில், 5-ஆம் வகுப்பு சேரும் தனது மகன் கோல்டன் ஸ்டோல்ட்ஸ் (Colton Stolz), பள்ளிக்குச் செல்லும் முதல் நாளில் புகைப்படம் எடுக்க மறுத்து அடம்பிடித்ததால், அவரது தாய் காவல்துறையின் உதவியுடன் அவரை விளையாட்டாக 'கைது' செய்ய வைத்த சம்பவம் நெகிழ்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லும் வழியில், தாய் அமண்டா ஸ்டோல்ட்ஸ் (Amanda Stolz) தனது மகனைப் படம் எடுக்க விரும்பினார். ஆனால் கோல்டன் அதற்குச் சம்மதிக்காமல் அடம்பிடித்துள்ளார்.அப்போது அந்த வழியே வந்த காவல்துறை அதிகாரி ஜாக் ரோஸ் (Jack Ross) என்பவரிடம் தாய் உதவியைக் கேட்டுள்ளார். உடனே அதிகாரி ஜாக், "பள்ளித் தொடக்க நாளன்று அம்மாவுக்குப் புகைப்படம் எடுக்க மறுப்பது சட்டப்படி குற்றம்" என்று விளையாட்டாகக் கூறி, அவசர விளக்குகளை எரியவிட்டு கைவிலங்கு மாட்டிச் சிறுவனைக் கைது செய்வது போல நடித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, "இப்போது நாங்கள் உன் புகைப்படத்தை எடுத்துவிட்டோம் அல்லவா?" என்று தாய் சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.காவல்துறை அதிகாரி இந்த விஷயத்தை விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு, சிறுவனுக்கு ஒரு வேடிக்கையான நினைவை ஏற்படுத்திக் கொடுத்ததை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Bootstrap