அண்டை மாநிலமான ஒன்டாரியோவில் வாங்கப்பட்ட பானக் கலன்களைக் (Beverage Containers) கியூபெக்கிற்கு எடுத்து வந்து ரீஃபண்ட் (Refund) பணம் பெறுவதைத் தடுப்பதற்காக, கியூபெக் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
கியூபெக்கின் பாட்டில் வைப்புத்தொகை நிர்வாக அமைப்பான Consignaction, குறிப்பாக ஒட்டாவா நகர மையத்திற்கு அருகிலுள்ள காட்டினோ (Gatineau) மையங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாலும், நீண்ட வரிசைகள் நிலவுவதாலும் இம்மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
கியூபெக்கில் சாஃப்ட் டிரிங்க்ஸ், ஜூஸ் மற்றும் பால் பாட்டில்களுக்கும் ரீஃபண்ட் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் ஒன்டாரியோவில் இத்தகைய விதியில்லை. கியூபெக்கிற்கு வெளியே வாங்கப்பட்ட பாட்டில்களுக்கு ரீஃபண்ட் கோருவது சட்டப்படி குற்றமாகும்.
ஒன்டாரியோ வாசகர்கள் இனி "Express Return" என்ற முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பாட்டில்களை நேரடியாகக் கொடுத்து உடனுக்குடன் ரொக்கப் பணம் பெற முடியாது. மாறாக, பாட்டில்களைப் பைகளில் போட்டு ஒப்படைக்க வேண்டும்.
அவை பரிசோதிக்கப்பட்டு, கியூபெக்கில் வாங்கப்பட்ட பாட்டில்கள் மட்டுமே உறுதிசெய்யப்பட்ட பிறகு, சுமார் ஒரு வாரத்திற்குள் Consignaction செயலி (App) மூலமாக ரீஃபண்ட் தொகை வழங்கப்படும்.
பாட்டில்கள் எங்கு வாங்கப்பட்டன என்பதைச் சரிபார்க்க கூடுதல் சோதனை முறைகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
காட்டினோ பகுதியில் கூட்ட நெரிசலைக் குறைக்க 7 புதிய பல்க் ரிட்டர்ன் (Bulk Return) மையங்கள் தொடங்கப்படவுள்ளன.