பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் அரிதான சூரிய கிரகணம் (Solar Eclipse) தென்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
பிரிட்டன் மற்றும் வட ஐரோப்பிய நாடுகளில் சூரியனின் 90%-க்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்ததால் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. ஸ்பெயின், ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு சில நிமிடங்கள் பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்தது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் திரண்ட மக்கள் சிறப்பு கண்ணாடிகள், தொலைநோக்கிகள் மற்றும் எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி இந்த அரிய வானியல் நிகழ்வைக் கண்டு களித்தனர்.
நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சரியாக ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும்போது, அது சூரியனின் ஒளியை மறைத்து பூமியின் மீது நிழலை ஏற்படுத்துகிறது. இத்தகைய முழு சூரிய கிரகணம் மீண்டும் இதே பகுதியில் ஏற்படுவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது. 2026 முதல் 2028 வரை உலக அளவில் மேலும் சில சூரிய கிரகணங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.