93 பேருக்கு எதிராக இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பி அழைத்துவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

'முழு நாடும் ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

2024, 2025 மற்றும் நடப்பாண்டின் இதுவரையான காலகட்டத்தில் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைகள் ஊடாக 38 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் .

அத்துடன், பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய மற்றும் தீவிர குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான விசேட திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Bootstrap