தென் சீனக் கடலில் (South China Sea) சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீன மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பகுதியில் பயணித்த பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனக் கடற்படை கப்பல்கள் சக்திவாய்ந்த 'வாட்டர் கேனான்கள்' (Water Cannons) மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளன.

 இத்தாக்குதலுக்கு உள்ளான பிலிப்பைன்ஸ் கப்பல்களில் ஒன்றில் CNN செய்தியாளர் குழுவும் பயணம் செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 ஒரே வாரத்தில் இப்பகுதியில் சீன மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது பதற்றமான மோதல் சம்பவம் இதுவாகும்.

தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயல்வதும், அதை பிலிப்பைன்ஸ் எதிர்ப்பதும் அப்பகுதியில் தொடர்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

Bootstrap