அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன.
ஓட்டல் ஊழியரைக் கொலை செய்த என்டனி டேரல் (66), தனது காதலியை சுட்டுக்கொன்ற கார்லோஸ் (70) மற்றும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஜெரமி வில்லியம்ஸ் (42) ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இவர்களுக்கு ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.