இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் குஸ்ரா கிராமத்தின் எல்லையில் உள்ள பாலஸ்தீனர்களின் வீடுகளை முற்றுகையிட்டனர். வீடுகளின் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளையும் துண்டித்தனர்.
இஸ்ரேலிய ராணுவத்தினர் கிராமத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பாலஸ்தீன குடியிருப்பாளர்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இஸ்ரேலிய ராணுவம் பல பாலஸ்தீன வீடுகளைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து, அவற்றை ராணுவத் தளங்களாகப் பயன்படுத்தியது.
இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கத் தூதர் மைக்கேல் ஹக்கபி மற்றும் சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன.