66 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 66 இலட்சம் ரூபா பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகுதியுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதுடைய காசாளராகப் பணியாற்றும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இந்த சிகரெட் தொகுதியை சீனாவில் இருந்து கொள்முதல் செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கு வந்து, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.

இதன்போது, 03 பயணப் பொதிகளுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 44,000 சிகரெட்டுகளைக் கொண்ட 220 கார்ட்டன்கள் (Cartons) கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் சிகரெட் தொகுதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Connection failed: Operation not permitted