ஒரு இலட்சம் சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 80,000 முதல் ஒரு இலட்சம் வரையான சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருமளவிலான துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களிடம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து தெரிவித்த போது, சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் நாட்டிலுள்ள குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித சலுகையும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Bootstrap