ஆப்கானிஸ்தானில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு மேல்நிலைப் பள்ளி கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அதிர்ச்சி தரும் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய உடன், 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்து பெண்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.
அதில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்பதும் உள்ளடங்குகிறது. இடைநிலைக் கல்வி மட்டுமின்றி, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பெண்கள் செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கல்வி மறுக்கப்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.