மேரின்லேண்டில் இருந்து மேலும் 6 திமிங்கலங்கள் அமெரிக்க அக்வேரியங்களுக்கு இடமாற்றம்

ஒன்டாரியோவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இயங்கி வந்த மேரின்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் இருந்து மேலும் 6 பெலுகா (beluga) திமிங்கலங்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த திமிங்கலங்கள் டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்து சிகாகோவில் உள்ள 'ஷெட் அக்வேரியம்' (Shedd Aquarium) மற்றும் அட்லாண்டாவில் உள்ள 'ஜார்ஜியா அக்வேரியம்' (Georgia Aquarium) ஆகியவற்றிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன.

 இந்த மாற்றத்தின் மூலம் மேரின்லேண்டில் உள்ள திமிங்கலங்களின் எண்ணிக்கை 11 ஆகக் குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு திமிங்கலங்கள் வெற்றிகரமாகப் புதிய வாழ்விடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக பூங்காவின் ஆலோசகர் ஆண்ட்ரூ பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாகப் பராமரிக்க முடியாததால், 2024-ஆம் ஆண்டில் மேரின்லேண்ட் தனது சேவைகளை நிறுத்தி, நிலத்தையும் பூங்காவையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

மேலும் 3 இடமாற்ற நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் டால்ஃபின்கள் மற்றும் இரு பெலுகா திமிங்கலங்கள் ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து திமிங்கலங்களையும் இடமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Bootstrap